அடடா!
மாயையான மனத்தில்தான்
மாற்றங்கள் எத்தனை?
நிலையில்லா உலகுக்கோர்
நிலையில்லா நிலவு
நிலையில்லா மனதுக்கோ பல
நிலையில்லா நினைப்பு
நேற்று வரை
நிலவு என்
நெஞ்சுக்கு பால்சோற்றைத் தான்
நினைவு படுத்தியது
இன்று நிலவு
ஏனென் மனதிற்கு
தேசியக் கொடியை
நினைவு படுத்துகிறது?
விந்தையாய் தான் இருக்கிறது!
எங்கேயோ ஏவப்படும்
ஏவுகலத்தில் ஏறி
எட்டத்தில் இருக்கும்
எழில்மிகு நிலவிலே
என் நாட்டு தேசியக்கொடி
எழுச்சியுடன் நிற்க
என்மனமோ நானேஅதை
ஏவியதாக எண்ணுகிறது
இது மனத்தின் மாயையோ?
இருக்கட்டும்...
நிலவுக்கு கலம் அனுப்பி
நாட்டிற்கு பெருமை சேர்த்த
நாயகர்களைப் போற்றிப் புகழ
நான் தகுதியுள்ளவன் அல்லேன்...
குறிப்பு: சந்திரயான் கலத்திலிருந்து
நம்
தேசியக்கொடி நிலவில் நிறுவப்பட்ட
அன்று மனம் நெகிழ்ந்து எழுதியது...