It gets curiouser and curiouser!

Tuesday, 4 August 2015

Sunday, 14 June 2015

மயிலிறகு மனதோடு ஒரு நேர்காணல்-Interview with Tamil Writer Dr. Thamazhachi Thangapandiyan


ஹரீஷ்: கல்லூரி மலருக்கு முதல் முறையாக தமிழ் பேட்டி எடுக்க வேண்டும் என எண்ணிய போது, தமிழ் எழுத்தாளர் ஒருவரை பேட்டி எடுத்து துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்று உங்களை தேர்வு செய்தோம்.

 முதல் முயற்சியிலே என்னை சந்தித்ததற்கு மிகவும் நன்றி. இன்றைய இளைஞர்கள் தமிழ் குறித்து ஆர்வமாக இருக்கிறார்களா என்ற எனது சிறிய சந்தேகத்தை இன்று நீங்கள் போக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி!




திவ்யா: சுமதி என்ற இயற்பெயரை 'தமிழச்சி' என மாற்றிக் கொண்ட காரணம் என்ன? தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் தமிழச்சி என கூப்பிட்டால் திரும்ப பார்க்கும் உரிமை உள்ளபோது நீங்கள் இந்த பெயரை தேர்வு செய்ததன் காரணம்?

நான் எழுத வந்த சமயம் சுமதி என்ற பெயரில், கவிதைப்பரப்பிலும் புதினப்பரப்பிலும் இருவர் இயங்கிக் கொண்டிருந்தனர். குழப்பத்தை தவிர்க்க புனைப்பெயர் தேடிய பொழுது, யோசனையின்றி எடுத்த பெயர் தான் தமிழச்சி. தமிழ் கிராமத்து பெண்ணின் பின்புலம் 'தமிழினி' , 'தமிழி' என்ற சொற்களில் வந்தாலும், 'தமிழச்சி' என சொல்லும் போது ஏற்படும் பெண்மை பெருமிதம் இவற்றில் பிரதிபலிக்கவில்லை. தமிழ் அடையாளம், பெண்மை பெருமிதம், இரண்டும் சேர்ந்ததே தமிழச்சி.


ஹரீஷ்'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரம் தமிழில் பெயர்க்க வேண்டும்' என்றார் பாரதி. எந்த நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய தங்களுக்கு ஆசை?

 மொழிபெயர்ப்பு Translation என்பதிலிருந்து Transcreationக்கு வந்து விட்டது. அதாவது மொழிபெயர்ப்பே இன்னொரு படைப்பு.ஆங்கிலத்தில் உள்ள Romantic Poets எனப்படும் இயற்கை சார்ந்த கவிஞர்கள், ஆப்பிரிக்க பெண் கவிஞர்கள், புலம்பெயர்ந்து வசிக்கும் தமிழ் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க ஆசை. தமிழை வேராகவும் மற்ற மொழிகளை சிறகுகளாகவும் வைத்துக் கொண்டால் பல நாட்டுக் காவியங்களையும் தமிழிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.அதனால் தான் மொழிபெயர்ப்பு ஒரு முக்கிய செயல்பாடு என்று நான் எண்ணுகிறேன்.

கௌதம்: ஒரு பெண் எழுத்தாளராக நீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து?

சவால்கள் என எனக்கு பெரிதாய் ஏதுமில்லை. என் அப்பாவும் அம்மாவும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதால் நான் நினைத்ததை படிக்கவும், பேசவும், எழுதவும், எனக்கு சுதந்திரம் இருந்தது. எனக்கு சவாலாக இல்லை என்பதால், அனைத்து பெண்களுக்கும் அப்படி என்று கூறிவிட முடியாது. குறிப்பாக பெண் எழுத்தாளர்களுக்கு, அவர்களது குடும்பமும், சாதீய ஆதிக்கமும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. மனதிற்கு பட்டதை துணிச்சலாக எழுதும் சாதகமான சூழ்நிலை இல்லாதது ஒரு பெரிய சவால். எழுத்தாளராய் மட்டுமிருந்து ஒருவர் வாழ்க்கை நடத்தி விட முடியாது என்பதே ஒரு மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.

ஹரீஷ்: ஆங்கில புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள் விற்கின்றன. ஆனால் தமிழில் அப்படி விற்கும் நூல்கள் இல்லை. தமிழ் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் குறைந்து வருகிறதா? அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?

'குறைந்து வருகிறது' என சொல்வதை விட 'இல்லை' என்று தான் நான் சொல்வேன். என் வீட்டுப் பிள்ளைகளை நான் தமிழ் கவிதைகள் சொல்லியே வளர்த்தாலும், ஒரு ஆங்கில நாவலை இரவோடு இரவாக வாங்கவே வரிசையில் நிற்கிறார்கள். ஒரு தமிழ் புத்தகத்திற்கு அப்படி நடப்பதே இல்லை. நம் அளவுகோல்கள் மேலை நாட்டை சார்ந்தே உள்ளது.எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கதை சொல்லி வளர்க்கிறார்கள்? இரும்புகை மாயாவி, ரெட்டைவால் ரங்குடி, இவையெல்லாம் இன்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. தமிழில் இத்தனை விஷயங்கள் உள்ளது என குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.தமிழ் புத்தகங்களுக்கான Demandஐ நாம் தான் உருவாக்க வேண்டும். இந்த பொறுப்பு பெற்றோர்களுடையது.

திவ்யா: நம் நாட்டுப்புறக் கலைகள் என்றாலே சினிமாவில் சித்தரிக்கப்படுகின்ற நடனம் தான் சாதாரண மக்கள் மனதில் தோன்றுகின்றது. நம் நாடுப்புறக் கலைகள் நழிவடைந்து வருவதற்கு ஊடகங்களிலிருக்கும் சினிமாவின் ஆதிக்கம் தான் காரணமா?
இதே கேள்வியை திரைத்துறையினரிடம் கேட்டால், மக்கள் அதைத் தான் விரும்புகிறார்கள் என்று சுலபமாகச் சொல்லி தப்பித்து விடுவார்கள். ஆனால், நான் உங்கள் பக்கம் தான். அவர்களுக்கிருக்கும் சமூகப்பொறுப்பை ஏற்கவேண்டும். சினிமாவில் காட்டப்படும் ஆபாசமும், பெண்கள், திருநங்கைகளுக்கு எதிராக வரும் வசனங்களையெல்லாம் அந்த இயக்குனர் நினைத்தால் தவிர்க்கலாம். சினிமாவை மட்டும் ஒரு காரணமாக நான் சொல்லவில்லை. ஆனால், சினிமா ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.

ஹரீஷ்: 'பிசாசு' படத்தில் திரைப்பாடல் எழுதிய அனுபவம் குறித்து?

நிறைய பாடல் எழுதும் வாய்ப்புகள் வந்தும் அவற்றை நான் தவிர்த்து வந்தேன். ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு பாடல் எழுத என்னால் இயலாது. ஆனால் பிசாசு படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சூழல் வித்தியாசமானது. ஒட்டுமொத்த உலகத்திற்கான கருணையை வேண்டும் ஒரு கவிதை சூழல் என்பதாலும், இயக்குனர் பாலா மற்றும் மிஷ்கின் மீது இருந்த மரியாதையினாலும் இந்த பாடல் எழுதும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். மிஷ்கின் சிறந்த படிப்பாளி; கவிஞரும் கூட. அதனால் எழுதுவதற்கான் சுதந்திரம் எனக்கு இருந்தது. இந்த பாடல் என் மனிதிற்கு மிகவும் நெருங்கியது.

[பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கவிஞர் பொருள் விளக்க, அதை கேட்டு நாங்கள் திளைத்தோம்.]

கௌதம்: அழிந்து வரும் நாடகக்கலையை புதுப்பிக்க என்ன செய்யலாம்?ஒரு நாடகக் கலைஞராய் உங்கள் கருத்து?

நாடகக் கலை அழிந்து வருவது மிகவும் வருந்தற்குரிய விஷயம். பழைய நாடகங்களுக்கு சமகால interpretation தரும் நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கும். உதாரணதிற்கு, 'வஞ்சமகள்' என சூர்ப்பணகை நாடகம் ஒன்று நாங்கள் நடத்தினோம். இன்று பெண்களுக்கு எதிராக நிலவும் அமிலவீச்சையும், காவியத்தில் வரும் மூக்கறுத்தலையும் உவமைப்படுத்தி நாடகக் கரு ஆக்கினோம். இவை நாடகக் கலையை relevantஆக ஆக்கும். அது தவிர தமிழுக்கென்று பிரத்தியேகமாக 'National School of Drama' போன்ற ஒன்றை துவங்க ஆசை.
Left to Right: Gowtham S, Dhivyapriya N, Dr.Thamizhachi Thangapandiyan, Harish S


ஹரீஷ்: 'Tamil Literature towards new direction' என்ற தங்களின் ஆய்வுக் கட்டுரைப் பற்றி?

வெறும் பழம்பெருமைகளை சொல்வதோடு நிறுத்தாமல், இன்றைய சூழலுக்கு தமிழ் இலக்கியத்திலிருந்து என்ன எடுத்துக் கொள்ளலாம் என்பதே அந்த ஆய்வுக்கட்டுரை. பழைய காவியங்களையும், காப்பியங்களையும் 21ம் நூற்றாண்டின் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதே அதன் நோக்கம்.

திவ்யா: மொழி என்பது நம் கருத்தை வெளிப்படுத்த உதவும் ஓர் கருவி. அப்படியிருக்க, புளூடூத், ஃபேஸ்புக் போன்ற வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மொழியை வளர்க்கலாமா?
மொழி என்பது நெகிழ்ந்துக் கொடுத்தால் தான் வளர முடியும். சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. Technical terms எனப்படும் தொழில்நுட்பச் சொற்களை, உதாரணத்திற்கு, புளூடூத், ஃபேஸ்புக், இவையெல்லாம் உள்வாங்கிக்கொள்வதில் தவறில்லை. பிற நாடுகளுக்குச் செல்லும்போது, தாய்மொழியில் இதுப்போன்ற சொற்களைப் பழகியிருந்தால், அங்கேச் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் இந்த நெகிழ்வுத் தன்மையின் எல்லை எது என்பதைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். Proper nouns அதாவதுப் பெயர்கள், வழக்குச் சொற்கள் (காஃபி போன்றவை), தொழில்நுட்பச் சொற்கள் ஆகியவற்றை வலிந்துத் தனித்தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அதே சமயத்தில் அடிப்படை அமைப்பினை மாற்றாமலிருக்க வேண்டும்.

கௌதம்:உங்கள் எழுத்தினை ஊக்குவிக்கும் சூழ்நிலை ஏதாவது உள்ளதா? அது என்ன? அதை நீங்கள் எப்படி அமைத்துக் கொள்வீர்கள்?
அப்படி எதுவும் இல்லை. புத்தி சார்ந்து எழுதுவதற்கு சூழல் வேண்டும். உதாரணத்திற்கு, விமர்சனக் கட்டுரை எழுதுவதற்கு ஒரு அமைதியான சூழல் வேண்டும். ஆனால், உணர்வு சார்ந்து எழுதும்பொழுது அது தேவையில்லை. வாழ்க்கை ஒரு சம்மட்டிக்கொண்டு ஓங்கி அடிக்கும்பொழுது, எந்த இடமாகயிருந்தாலும், காலமாகயிருந்தாலும்; இரண்டு நிமிடம், பேப்பர், பேனா போதும் எழுதுவதற்கு. சூழ்நிலை அங்கே முக்கியமில்லை. நான் உணர்வு சார்ந்து ரசிக்க எனக்கு சூழ்நிலை வேண்டும்; ஆனால் படைக்க சூழல் ஒரு முக்கிய அளவுருவாகத் தோன்றவில்லை.

ஹரீஷ்: இன்றைய இளைஞர்கள் யாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நடிகர்களையோ, பெரும் முதலாளிகளையோ தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
 நமக்கான முன்மாதிரிகள் நமக்கு அண்மையிலேயே இருக்கிறார்கள். உங்கள் அம்மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவளது உலகமே உங்களைச் சுற்றி தான் இயங்குகிறது. எளிய அறம் சார்ந்து இயங்குபவர்கள், சமுதாயத்துக்கு உண்மையிலேயே உதவுபவர்கள் என எக்கச்சக்க பேரை முன்மாதிரியாய் எடுத்துக் கொள்ளலாம்.

திவ்யா:இறுதியாக, எங்கள் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து...

தமிழச்சி: இந்தக் கால இளைஞர்களிடம் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நம்பிக்கைக்குறியவர்களாகவும், சமநோக்குச் சிந்தனை உடையவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர்களிடம் பகிர வேண்டிய சிந்தனை இதுதான். கட்டாயம் அனைவரும் சங்க இலக்கியங்களை படியுங்கள். நம் வாழ்வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சங்க இலக்கியத்தில் விடையுண்டு. உங்கள் வெற்றி என்பது சமுதாயம் சார்ந்த பணம் சார்ந்த விஷய்மில்லை என்ற தெளிவோடு இருங்கள். உங்கள் வெற்றி உங்கள் கையில்!
 
             
                                                                                     

Thursday, 23 April 2015

குவியமுள்ள சொற்பேழை

தொன்று தொட்ட காலம் முதல் இன்றுவரை தமிழர்களின் ஆர்வம் கலையிலும் அறிவியலிலும் இம்மியளவும் குறையாமல் இருந்து வருகின்றன.அறிவுப்பசியும் கற்பனைதாகமும் தமிழருக்கு மிகுதி. அவர்கள் கலையை அறிவுப்பூர்வமாய் ஆய்ந்தார்கள்;அறிவியலை உணர்வுப்பூர்வமாய் ரசித்தார்கள்! 'மையோ மரகதமோ மழைமுகிலோ மறிகடலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என ராமரை வர்ணிக்கும் அதே சமயம் திடம்,திரவம்,வாயு,திட-திரவம் என்று பொருட்களின் 4 வகையான நிலைகளையும் எடுத்துரைக்கிறார் கம்பர்.அவரைப் போலவே கலையையும் அறிவியலையும் நெருக்கித் தொடுத்து நேர்த்தியான பல பாடல் வரிகளை தந்தவர்கள் வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி ஆவர். அவர்களின் கற்பனை வளத்தில் உதித்த இரத்தினங்களில் பொறுக்கி எடுத்த சில வைர வரிகளை மட்டுமிங்கு உற்று நோக்குவோம்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6 முறை வென்று சாதனை படைத்தவர் வைரமுத்து. மிக நுண்மையான அறிவியலயும் செம்மையாக மொழிப்படுத்துபவர் அவர். உதாரணங்கள் பல.
பார்வை தெரியாத பாவை ஒருவள் உருவங்களின் அவசியமின்மையை பற்றிப் பாடுவதே சூழ்நிலை.
'இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை'
என்று பாடுகிறாள். சத்தம் என்கிற சக்தியானது அலைகளாக பயணிக்கிறது.ஒளியைப் போலல்லாமல் ஒலி பயணிக்க ஒரு ஊடகம் அவசியம்.விண்வெளியில் பார்க்க முடியும். ஆனால் காற்று இல்லாததால் கேட்க முடியாது. இந்த உண்மையைத் தான் அழகாய் பாடினார் கவிஞர்.




நிலவிலும் தண்ணீரிலும் பூமியை விட ஈர்ப்புவிசை குறைவு. அதனால் பொருட்களின் எடை குறையும். காதல் வசப்பட்டவனொருவன் தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் உணர்வுகளைப் பாடும் போது இவ்வுண்மயை கூறுகிறார் கவிஞர்.
'நிலவில் பொருள்கள் எடையிழக்கும்; நீரிலும் பொருள் எடையிழக்கும்;
காதலில் கூட எடையிழக்கும்; இன்று கண்டேனடி!'
தாயின் கர்ப்பப்பையில் சிசுவிற்கு உணவும் சத்துக்களும் பரிமாறப்படும்; கழிவுகளும் சுத்திகரிக்கப்படும். இவையனைத்தும் ஒரு நீரூடகத்தில் தான் நிகழ்கின்றன என்கிறது அறிவியல்.
'தண்ணீர் குடத்தில் பிறக்கிறோமோ!
கண்ணீர் கரையில் முடிக்கிறோமோமோ!' என இதை வர்ணிக்கிறார்.

கடலில் புயல் மையம் கொள்வதால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுநிலை, கரையில் பெரும் காற்றோட்டத்தையும் கனத்த மழையையும் வரவழைக்கும் என்பது வாநிலை ஆய்வு அறிவியல்.
'புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு!
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு!'
என்பது கவிஞரின் வாழ்நிலை ஆய்வு உளவியல்.

புலவரின் மகன் மதன்கார்க்கியும் சளைத்தவரல்ல.Lyric Engineering எனும் பாடல் பொறியியலை தமிழில் அறிமுகப்படுத்தி பல நுட்பமான பாடல்களை படைத்துள்ளார்.'நிழலை திருடும் மழலை','பென்சிலை சீவிடும் பெண்சிலையே' என்பவை பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வைர வரிகள்.
'என் நீலப்பல்லாலே உன்னோடு சிரிப்பேன்.
என் இஞ்சின் நெஞ்சோடு உன்னெஞ்சை அணைப்பேன்'
என்பது பாடல் வரி! Bluetooth என்ற தொழில்நுட்பத்தை நீலப்பல் என்று பெயர்த்தது கற்பனாசக்தியின் உச்சகட்டம்!
புகைப்பட வல்லுனர் ஒருவர், தன் புகைப்படப் கருவியில் தன் காதலியை காண்கிறார்; கூடவே ஒரு ஆண் நன்பரோடு அவள் சிரித்து பேசுவதை பார்க்கிறார். தன் மனதில் தன் காதலைப் பற்றி ஒரு உறுதியற்ற சலனம் ஏற்படுகிறது. அந்த நிலை தான் எடுக்கும் புகைப்படத்திலும் பிரதிபலிக்கிறதாம்.
'ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை' குவியம்: Focus.
குவியம் என்ற வார்த்தையை பிரபலப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
'அடி பெண்ணே என் மனது எங்கே? ரேடார் விளக்குமா?
அடி என் காதல் ஆழம் சோனார் அளக்குமா?'
என்று காதலன் காதலியை பார்த்து கேட்பதாக பாடல் எழுதியுள்ளார் கார்க்கி.
இருப்பிடமறியா பொருட்களை கண்டுபிடிக்கும் ரேடார்; கடலுக்கடியில் உள்ள பொருளின் ஆழமறியும் சோனார்; இந்த அறிவியல் சாதனங்களை அழகாய் இவர் பாடி விட்டுப் போனார்!
Higgs Boson என்ற துகளை கண்டுபிடித்ததே இயற்பியலின் புதிய சாதனையாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது! அதற்கு 'கடவுள் துகள்' என புனைப்பெயர் கொடுத்து கவிதை செய்தார் கார்க்கி.
'எடையில்லா கடவுள் துகள் போலே மிதக்கிறேன்
வெள்ளை வண்ண தடையில்லா வழியின் மேலே!' என்று.
கவிதையில் நவீன அறிவியல் தகவல்களை கொடுத்து நம் பாடல்களை உல்கத்த்ரத்திற்கு உயர்த்தியுள்ளார் கார்க்கி.

வைரமுத்து மற்றும் மதன்கார்கியின் அறிவியல் ஆழமும் கற்பனை வளமும் சொல்லி மாளாது. அர்த்தமில்லா பாடல் வரிகள் குவிந்து கிடக்கும் இக்காலத்தில், இதுபோன்ற பாடல்களே குவியமுள்ள சொற்பேழையாக திகழ்கினறன. பாடலின் இசையை ரசிக்கும் நாம், அதன் வரிகளையும் சற்றே உணர்ந்து ரசித்தோமானால், தமிழும் வளரும்; அறிவும் பெருகும்!
வாழ்க தமிழ்!



Sunday, 22 March 2015

பி….. ரி……வு!


ஒருவர் விலக
மறுவர் உருக ஏற்பட்டதோர்
பி         ரி         வு!

வேலைக்காக தந்தையின் பிரிவு
படிப்பிற்காக பிள்ளையின் பிரிவு
ஏக்கங்களின் அனிச்சையாய் மீண்டும்மீண்டும்
தனிமை.

பிரிவுக்கு பிரதிபிரிவு

வெட்ட வெளியினில்
கொட்டும் அன்புமழை
சிலர்நனைய பலரொதுங்க வேடிக்கையாய்
வாழ்க்கை.

ஒருமுனையில் இளமையின் ஆரவாரம்
மறுமனையில் முதுமையின் தனிமை
மெல்லிய கோட்டாய் இடையிருப்பது
வாழ்வின் சத்தியம்.

காக்க வைப்போரை
காக்க வைக்கையில் துளிர்வது
காலத்தின் சிரிப்பொலி

பிரிவுக்கு பிரதிபிரிவாய்
வினையின் எதிர்வினை
வாழ்க்கையின் மூன்றாம் விதி.

காலவெள்ளம் தேங்கி நிற்கும்
வாழ்க்கைப் பள்ளத்தில் ஈக்களாய்
மாந்தர்கள்.

பாவகைகள் பறந்தோட
எதுகை மோனை ஏதுமின்றி
பிரிவு எழுதும் இந்த ஹைக்கூ!



Friday, 20 March 2015

Fake Profile



Disclaimer: All characters are fictional. All opinions are inspired from reality. Any mismatch between fiction and reality is the responsibility of the reader.
Once upon a time, there lived a person seeking spiritual enlightenment.
Just like always, let us just call him X.
X’s lifelong desire was to meet god.
This is the story of his appointment with God on 94 CE 07:03 PM in the calendar of the spirits.
NOTE: God’s Mark sheets are attached within the story in [CATEGORY=MARKS]
                                                       ………………………………………………….
Once Upon a Time, in Nasik
X was pursuing his course B.Sp (Bachelor of Spirituality) with great vigor and greater grades under an enlightened master Sri. <Insert Variable Name of your choice>, in the Nasik School of Human Consciousness Studies.
Owing to his outstanding performance in the course, X was eligible to apply for an internship in God’s workplace to have a hands-on experience on the workings of Spiritualism. And Sri. < Variable Name> agreed to personally suggest X’s name for the highly coveted internship opportunity. The recommendation (with attached employment bond for 1 Yuga) must be written on a postcard with an eight Anna Stamp (preferably with the Lord’s face), and had to be duly signed and posted by the student to be accepted in God’s admissions office. All official communications with God can be done only through the post office. It was part of the formal application procedure.
“I am glad to receive a recommendation from the highly revered master himself. I am sure your letter will get me a position in God’s workplace Sir” said X on receiving the recommendation postcard.
“It will, beta. In the meantime, complete the technical paper that we have been working on.”
“Sure Sir. I am proofreading the paper. Will meet you when it is done” said X before leaving. Truth be told, he didn’t have the slightest notion of meeting his master ever again.
X’s best friend, (lets call him Y) had also applied for the internship, and they met at the post office for mailing the letters to God’s admission office. It was a long queue and the perfect scenario for friends to make small talk on their application status.
“Has your master given you a strong recommendation?” asked Y.
“He has. For all the favors I have done him, he owes me at least this strong reco.” said X.
“Great, then. My master has signed me a blank letter asking me to fill it up with favorable adjectives. Show me your letter. I will get an idea” said Y.
No No NO. The contents of this letter are confidential. My master asked me not to open it ever. His master had never said such a thing. He just secretly hoped his friend wouldn’t make it to the internship. Competition was his excuse for not helping.
Y was flabbergasted. He knew this would be the reaction, but he had to try. He quickly changed the topic to avoid any further awkwardness.
“How is the technical paper with your master turning up?” Y asked.
“I have not even typed a word” promptly came the reply.
“But why? It was your master’s pet project.” The queue was moving up.
“Pet project, my foot. ‘Matrix computations of the humane aspects on distinguishing deep sleep and dream states’ is his title. It isn’t a great research area. I was just nodding along, to get this reco letter” X said, while signing the postcard with his thumb impression and submitting it to the postmaster.
“So what’s your plan after this?” Y asked after finishing his own application procedure.
“I will have to receive the visa to reach God’s office once my application is processed. I have to prepare for the appointment” said X.
“I pray for you to get selected. But what if your applications is rejected?” asked Y.
X was visibly annoyed at that remark but continued “I have backup plans. I have applied for Research Intern at ‘Persian school of Atheism studies’ and a Job Position at ‘International Pottery Factory’. If nothing else, I would stick on to doing M.Sp( Master of Spirituality) somewhere.”
“But they are all so unrelated!” The thought crossed Y’s mind. But instead, he said Good luck and left the place. Because sometimes, keeping your thoughts to yourself can avoid so much more trouble.
                                                                    ……………………………………………
Three weeks later, in NSHCS Hostel Room
“Hey, you are going downstairs to get tea no? Bring me some tea in this cup please. I am going to bath, that’s why!” X requested his roommate Y. He is kind when he is asking for favors.
X came out after the bath and wore his spiritual symbols, chanting God’s name, drinking tea and solving Sudoku all at once. Y was busy studying for the upcoming final examinations.
“Hey, one help” asked Y.
“I am kind of busy here” replied X. Busy drinking tea that his friend had just bought him.
“It won’t take much time. Can you explain this problem? I have trouble solving it.” Y said.
“What’s the problem?” X fumed. He is also arrogantly rude when it comes to returning a favor. 
“This problem involving equations for distinguishing Reality and Imagination using Variables I (Intellect), M (Mind) and S (Senses) gives an indeterminate solution.”
“It’s a straightforward problem. You can’t even understand this and you are doing B.Sp! What a shame!” X commented while simultaneously scribbling the solution in his note.
“I understand this is the textbook method of solving the problem. But it assumes that my Reality R1 is the same as your Reality R2. Isn’t that wrong, scientifically?” 
X looked down upon him. “You are making the problem more complex than it is.”
“But, it is complex. It has fundamentally wrong assumptions”
X was annoyed. “You have lesser CGPA than me and you are doing philosophical research in this subject. Just apply this formula and pass the spirituality test. This is not complex.”
“You are wrong, you know. It is complex
“What complex?”
It is your superiority complex. And it can never be solved. Thanks for the help anyway” Y shut the door angrily before leaving.
X nonchalantly opened his mailbox to have received a letter which read, “Dear Mr.X, Congratulations!  Based on your spiritual profile and respectable recommendations, you are granted an appointment with our CEO, the venerable God on 94, 07:03 PM to finalize your internship opportunity. The candidate’s transport and accommodation charges will be refunded on production of proper bills. Have a nice appointment!”
He was elated. “I am meeting God. I deserve to have a superiority complex” he thought.
                                                     ……………………………………………………………..
94 CE 07:03 PM, in God’s workplace
X was excited. It is not everyday that a person gets to meet God. He was waiting in the reception room alone. There was a huge door locked from the inside. ‘God’s cabin is huge. God is living life king size’, he thought.  An assistant came inside the reception and set up a specially designed audio-set for X to communicate with God. “Our CEO, The Venerable God, will commence talking to you in 5 nimishas. Speak and listen only from the audio-set. Have a nice appointment” she said before leaving the room.
Only 1 out of 10000 applicants get this rare opportunity. X decided he had to be extremely competitive to let God decide that he deserved to be in that internship.
 A loud thundering voice came from inside the cabin. It had begun.
“Hey buddy, how are you?” asked the voice.
“I am doing great, my Lord! Why don’t you open the door so I can have a look at you?” X asked.
[CURIOSITY=100]
“You can’t see me with those eyes. And I have no intention of letting unprepared people to look me in the eye and talk to me.”
“I have been preparing myself for this appointment, all my life, my Lord. I am not unprepared!”
 “Is that so?”
“Yes, Venerable Master” [CONFIDENCE=100]
“I see. But I have been receiving regrets and complaints about you.”
“May I know who that is?”
No.No.NO. That is God-Devotee privilege. I do not break confidentiality. So, you tell me. Whom do you think can possibly have complaints about you?”
“Everybody Complains. This is a sick, greedy, unsatisfied world, my Lord.” [CONTENTMENT= 0]
“How different are you?”
“I am detached. I am perfect with my work. I have supremely high Spiritual Grades. I am superiorly intelligent than anyone else in this world. Except the Lord, maybe” [MODESTY=-100]
“How humble of you to tell that!”  X could sense the sarcasm in God’s voice.
“And you have achieved all this, by yourself?” asked the voice.
“Except humanely needs which are very trivial, all my intellectual achievements were the fruits of my own efforts. I am a self-made spiritual person. And I can learn a lot more in your workplace.” [GRATITUDE=-100]
“I just got the feeling from your answers that you were a know-it-all. “
“I will be, after this internship”, he smiled with pride.
“So, have you practiced what you have studied? How spiritual are you?”
“I am clean: I bath 3 times everyday. I am self-controlled: I eat only one meal per day. I wear all the symbols prescribed in the scriptures, reciting your thousand names millions of times every fortnight.”     [PROCEDURE: 100]
“You have had good habits. Full marks for that. But, that is not being spiritual.”
“If that is not being Spiritual, then I don’t know what is.”
“I will tell you what is. Your friend, Mr.Y, made a sincere prayer to me, for you to be selected. Infact, it was for him, that I selected you. He prayed for someone with no expectations in return. Have you ever done anything for other’s sake? ”
“Yes I have” [HONESTY= -100]
“FYI, I am God. I know when you are lying”
“Okay, I haven’t. But what is wrong in that? I concentrate on improving myself” [*REVISED HONESTY=0]
Don’t you want to improve the world? Help a struggling soul?”
“It is not humanely possible. People can help only themselves.” [ALTRUISM=0]
“Are you a social person?”
“Not so much. I like to keep to myself”
“Do you know why you don’t have many friends?”
“Intellectuals are lonely” [FRIENDLINESS= -100]
“Maybe. But people do not mingle with you, not because you are an intellectual or an ambitious geek. They do not mingle with you, because you are a selfish asshole”
“Excuse me?”
“You had ONE Friend; And you never helped him. Instead, you only used him. I know what you are. You are a fake profile.”
“Meaning?”
“This is not who you are on the inside. It is just how you wish to be perceived on the outside. Maybe it builds to your image you have conjured up for yourself. But this isn’t you. The real transformation should happen on the inside which evidently hasn’t.”
“But I want to be a spiritual person. It is my life’s goal”
The first step to being a spiritual person is to become a fine human being. Until you become one, I command you to walk this Penrose Staircase forever” [TOTAL=0]
“Why don’t you send me to hell instead?”
“Hell is for people who are sorry for whatever bad things they did. Not meant for people like you.”
“Dear God, punish me all you want. I agree I have built a fake profile. But I didn’t expect such uncouth language spoken with hatred and rudeness from a venerable God. This is not the God of my dreams.”
“That is who I am on the outside. Do you want to see who I am on the inside?” the voice said, opening the door of the cabin. It was Y speaking with a loud thundering voice into the specially made audio-set.
“Don’t be surprised. I was selected for the internship by the venerable God himself. This was my first assignment in having a hands-on experience with spirituality. I tried being a God, on The CEO’s command. You can try being a God too, by your own actions.” said Y.
X remained shell-shocked while walking on the endless Penrose Staircase.
“You showed me your fake profile. This is my fake profile, Friend.

Friday, 30 January 2015

The Tale of Thamizh Quiz

Who doesn’t love a Quiz? It is engaging, thought provoking, competitive and above all, it is pure unadulterated fun. So, when I was planning on conducting an event for the annual Pongal Celebrations Vasantham, an idea struck me. We have had Movie Quiz, Mythology Quiz, B-Quiz, SpEnt Quiz conducted on Campus, but never a Thamizh Quiz. What’s a Thamizh Quiz? Technically, it is the same old Quizzing wine served on a new Bottle titled Thamizh. It involves framing questions that sound alien on first reading, but has breadcrumbs enough to find the trail to an answer, the answer having a Thamizh connect- literature, movies, history, people, et al. The event became an instant hit that I followed it up for Vasantham 2015 too. This is the tale of the Thamizh Quiz, a solemn voice of Thamizh sung in English.
Consider this Question.X means ‘self-speak’ or one’s own speech. X is one of the few Tamizh words which have all forms of phonemes-The nasal, The Hard vowel and the Medium vowel. X was first mentioned in Tholkaapiyam, but surprisingly, the word is never mentioned in Thirukkural. What is X?” The question sounds tedious and is encoded with a lot of trivia, but the answer is easily decodable. Infact the answer is specified in the Question itself! The word is Thamizh, which has Vallinam ‘Tha’, Mellinam ‘Ma’ and Idaiyinam ‘Zha’ in it. In a surprisingly curious manner we have also learnt that the word Thamizh is never mentioned in Thirukural, truly making it a Universal Literary Work. Sounds Fun?
Being  QuizMaster :) !

The best quiz questions are the ones which have a story to it, which combines beauty, breadth and balance, all in a well-framed question. “The giant swing in Bangkok hosts one of the 12 Royal Ceremonies of Thailand where holy verses from literary works Tri-Bave and Tri-Yampavai are recited. These works are Thai translations of original Thamizh works X and Y.” Needless to say, X is Thirupaavai and Y is Thiruvempaavai, holy verses on Vishnu and Shiva respectively. Here’s another. Connect these. Antiquity, Harmony, Clarity, Independent, Serenity, Idealism Universality, Reason, Order, Humanism.” All these qualities are the criteria for a classical language status. Thamizh is one of the 6 recognized classical languages, and the more profound fact is that it is the only one which is still in wide usage amongst common speakers. That is not an easy question to crack.
One reason for conducting this Quiz was to bridge the gap between what we want to know and what we should know. We know a lot more about a Foreign Football Club than our own mother tongue. We are very much disconnected with our roots, because fundamentally we don’t take pride in our cultural and linguistic backgrounds. We have to wonder why we keep distance from our identities and pretend to be someone who we are not, trapping ourselves in places where we don’t belong.
One of the Connect Questions displayed pictures of Anaconda, Cheetah, Cash, Mango and Ginger, asking for a specific connect between them. A lot of connections are possible, and that is one of the positives of Quizzes, because it encourages possibilities involving a lot of educated guesses. The answer that I intended was that all these English words are of Thamizh origin: Anaconda from ‘Yaanai Kondran’ (Elephant Killer), Cheetah from ‘Siruthai’, Cash from ‘Kaasu’, Mango from ‘Maangaai’ and Ginger from ‘Inji’. Another Etymology question was “X is a richly flavored soup of Anglo-Indian origin, spiced with curry powder and served with a dollop of tangy sour cream. X translated literally from Tamizh means pepper water”. The soup is Mulligatawny, from the Thamizh ‘Milagu Thanneer’. Amazing how English borrows a lot from our language!
We are at the brink of facing a ‘never-before’ challenge of losing relevance due to an overwhelming influence of English. Not more than 10% of today’s existing languages are expected to survive the century. Thamizh, which has an unbroken chain of literary tradition, is facing a crisis today because a significant percentage of Thamizh people do not know to read or write in Thamizh. Tales of Chola and Pandya kings, Austere Avvaiyar’s classical literature, Our Architectural marvels, Supreme achievements in arts and culture are read more by foreigners in printed coffee table books than in fast forward Tamil homes. This has to Change. We have to take pride in our roots and represent our identities.
Interacting with the Participants

I took the liberty of introducing innovative rounds in the Quiz finals. One such round is ‘Minimalist Lyrics’ where the first line of a Thamizh Film song is represented in an image. The task is to find out the lyrics from its minimalist representation. Another round is, ‘Titular Books’ where the literary inspiration for prominent movie titles has to be found out. For example ‘Soodhu Kavvum’ is taken from the famous lines in Bharathiyar’s Panchali Sabatham. It was also fun naming the popular “pick your poison” quizzing round in Thamizh as ‘வேண்டப்பட்ட விரோதி!’
Quiz questions should give ‘Eureka Moments’ when the answers are revealed. “X is a Thamizh word for the ethnic group Yadava. Similar to Yadava, X also means both king and herdsmen. Ilangovadigal gave special mention to X in Silapathikaaram as they provided accommodation for Kannagi.” A word which means both king and herdsmen? ‘Kon’ is King, and ‘Ko’ means cow, hence, herdsmen are called Konaar! All Thamizh students have an acquaintance with the famous ‘Konaar Guide’.
Thamizh Book Shops have become glorified stationers where people queue up to buy “Tamil Guide Books” to pass an exam. No other Thamizh book sells as much. If a Thamizh Book sells a meager 5000 copies, it is considered a bestseller whereas the benchmark for other ‘light-read, skim through’ English ‘novels’ is in the million copies range. This is no rivalry, because, truly Thamizh has no enemies. One has to be living under a rock to be saying Thamizh isn’t universal and accommodating. Bharathiyaar asked to translate literary works of other languages into Thamizh alongside creating immortal Thamizh works.  “Every town is my town. Everyone is my kin. Good and bad don’t come from others” says an ancient Puranaanooru Poem. Relief comes from within. Thamizh is Innovating. One Quiz Question example would suffice.
KaReFo is a non profit educational research organization founded by lyricist Madhan Karky. Their focus is on Tamil Computing and language growth. One of their beta products includes Agaraadhi.com, which introduces new foreign words into Thamizh. One example of the word is Thaami(தாமி) which roughly means ‘something one does to oneself’, the English original of which was an Internet Sensation in 2013.” Thaami is the Thamizh word for Selfie!

There is no denying the fact that it is important to learn foreign languages to be connected to the world. But to be connected to ourselves, we have to protect our voice amidst external qualms. We owe a debt to the forthcoming generations to preserve the unbroken literary tradition. That is the message of the quiz, to keep learning, to reach for the sky while also staying deep rooted in our identities. Say Welcome to English and Thamizh will reply back in kind as ‘Vanakkam’!

Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com