ஒருவர் விலக
மறுவர் உருக ஏற்பட்டதோர்
பி ரி வு!
வேலைக்காக தந்தையின் பிரிவு
படிப்பிற்காக பிள்ளையின் பிரிவு
ஏக்கங்களின் அனிச்சையாய் மீண்டும்மீண்டும்
தனிமை.
பிரிவுக்கு பிரதிபிரிவு |
வெட்ட வெளியினில்
கொட்டும் அன்புமழை
சிலர்நனைய பலரொதுங்க வேடிக்கையாய்
வாழ்க்கை.
ஒருமுனையில் இளமையின் ஆரவாரம்
மறுமனையில் முதுமையின் தனிமை
மெல்லிய கோட்டாய் இடையிருப்பது
வாழ்வின் சத்தியம்.
காக்க வைப்போரை
காக்க வைக்கையில் துளிர்வது
காலத்தின் சிரிப்பொலி
பிரிவுக்கு பிரதிபிரிவாய்
வினையின் எதிர்வினை
வாழ்க்கையின் மூன்றாம் விதி.
காலவெள்ளம் தேங்கி நிற்கும்
வாழ்க்கைப் பள்ளத்தில் ஈக்களாய்
மாந்தர்கள்.
பாவகைகள் பறந்தோட
எதுகை மோனை ஏதுமின்றி
பிரிவு எழுதும் இந்த ஹைக்கூ!
0 comments:
Post a Comment