It gets curiouser and curiouser!

About Me!


என்னைப் பற்றி......

(இடையில் ஒரு முனகல்)

வணக்கம்.
எனக்கு ஒரு வழக்கம்
தமிழில்
கவிதை எழுதும் பழக்கம்.

'கவிதை'-மிகப்பெரிய விஷயம்!
அது எனக்கு எட்டியிருக்கிறதா,கிட்டியிருக்கிறதா?
தெரியவில்லை.
ஆனால்,
முயன்று பார்த்திருக்கிறேன்!

முதலில் 'கவிதை' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தது பற்றாக்குறை காரணமாக...
கட்டுரைக்கு 'மேற்கோள்' பற்றாக்குறையை தீர்த்து வைக்க எழுத ஆரம்பித்தது.
பின்னர்....
'புரட்சி நாயகன்' என்று நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாய் பிதற்றியவை சில..
அடுத்தவர் கருத்தை அப்படியே வாங்கி கொண்டு
வாடகை உணர்ச்சியாய் வெளிப்படுத்தியவை சில...
பிற கவிஞர்களின் வரிகளை திருடி, ஒப்பனை செய்து,இடைச்செருகலாய் கோர்த்து,
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவை சில.....

கற்பனை ஏதுமின்றியும் எழுதியிருக்கிறேன்....
இலக்கணம் ஏதுமின்றியும் எழுதியிருக்கிறேன்....

ஆனாலும் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு கவிஞன்!
ஏன்?
எழுத்தாளர்களுக்கே உள்ள இலக்கியத் திமிரா?!
இருக்கலாம்..
இருந்தாலும் நான் கவிஞன்.
ஏன் என்றால்,
நான் எழுதுவதற்காக எழுதிகிறேன்.
எழுதுவதை ரசிக்கிறேன்.
மொழியை ஆராதிக்கிறேன்.

புரிந்ததை எழுதிய காலமும் உண்டு....
உணர்ந்ததை எழுதிய காலமும் உண்டு....

வாழ்வின் அனுபவங்களில் கசிந்துருகும் தருணங்களில்
காகிதம் எடுத்து,
அதில் மையை ரொப்பியிருக்கிறேன்...

சிரித்தும் எழுதியிருக்கிறேன்...
அழுதும் எழுதியிருக்கிறேன்...

ஆனால், எழுதுவது என்பது எனக்கு என்றுமே
சுலபமான காரியமாக இருந்ததில்லை
அது ஒரு இன்ப அவஸ்தை...
காதலைப் போல...

என்னை வருத்தியெடுத்து தான்
வார்தைகளை வெளிக்கொணர்கிறேன்..
எனக்கு இது பிடித்திருக்கிறது...
அதனால் எழுதுகிறேன்....

எழுதியது எல்லாம் சரியா என்று தெரியவில்லை....
அவ்வப்போதைய உணர்ச்சிகளின் உச்சத்தில்
வரம்பு மீறி சில தவறுகளை வார்தைகளில் இழைத்திருக்கிறேன்...
எல்லாவற்றையும் பொறுத்தருள வேண்டும்!

மனதில் பட்டதை சுவாரஸ்யமாய் சுலபமாய் அழகாய்
சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்..

யாப்பு, அணி இலக்கணங்களுக்கு
மரியாதை உண்டு!
ஆனால் கடைப்பிடிக்கவில்லை!

சொந்தச் சரக்கு என்பது என்னிடம் குறைவு!
புதுமை என்றும், என் எழுத்துக்களில்
தெரிந்ததாய் ஏதும் தகவல் இல்லை!

அனுபவங்களை மொழிப்படுத்தியுள்ளேன்!
ரசித்ததை சொல்லில் பொறுத்தியுள்ளேன்!
அவ்வளவே!

எனக்குத் தெரிந்த தமிழில் எழுதி இருக்கிறேன்!
எதற்கும்
படித்துப் பாருங்கள்!
பிடித்தும் கூட போகலாம்...!

நன்றி!

இப்படிக்கு,
உன்னைப் போல் ஒருவன்!
# ச.ஹரீஷ்!


3 comments:

  1. Well written...but never thought you would have cried when writing.

    ReplyDelete
  2. Why not? Poem comes out swift if we are sad or crying :P

    ReplyDelete
  3. Ippadiyum ezhudalaam!! :) :)

    ReplyDelete

Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com